மினி கிறிஸ்மஸ் ட்ரீ கேக்

பழங்களை ஊறவைக்க
- உலர் திராட்சை (Raisins)எடை:1.8 அவுன்ஸ்அளவு:1/3 கப்
- உலர் கிரான்பெர்ரி (Dried cranberries)எடை:1.8 அவுன்ஸ்அளவு:1/2 கப்
- பொடியாக நறுக்கிய உலர் ஆப்ரிகாட் (Dried apricots)எடை:1.8 அவுன்ஸ்அளவு:1/3 கப்
- ரம் (Rum)எடை:1.8 அவுன்ஸ்அளவு:1/4 கப்
செய்முறை
பழங்களை ஊறவைத்தல்
50 g உலர் திராட்சை, 50 g உலர் கிரான்பெர்ரி மற்றும் 50 g நறுக்கிய உலர் ஆப்ரிகாட் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். இதில் 50 g ரம் ஊற்றி, குறைந்தது 2 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
கேக் மாவு கலவைக்கு
- வெண்ணெய் (Butterஎடை:2.5 அவுன்ஸ்அளவு:1/3 கப்
- பொடித்த சர்க்கரை (Powdered sugar)எடை:2.5 அவுன்ஸ்அளவு:2/3 கப்
- முட்டைஎடை:1.8 அவுன்ஸ்அளவு:1 துண்டு
- முட்டையின் மஞ்சள் கருஎடை:0.7 அவுன்ஸ்அளவு:1 துண்டு
- மைதா மாவுஎடை:2.8 அவுன்ஸ்அளவு:2/3 கப்
- பாதாம் மாவு (Almond flour)எடை:0.7 அவுன்ஸ்அளவு:1/4 கப்
- பேக்கிங் பவுடர்எடை:0.0 அவுன்ஸ்அளவு:1/4 தேக்கரண்டிகள்
- உப்புஎடை:0.1 அவுன்ஸ்அளவு:1/4 தேக்கரண்டிகள்
- பட்டைத்தூள் (Cinnamon powder)எடை:0.0 அவுன்ஸ்அளவு:1/2 தேக்கரண்டிகள்
- சுக்குத்தூள் (Dry ginger powder)எடை:0.0 அவுன்ஸ்அளவு:1/4 தேக்கரண்டிகள்
- பொடியாக நறுக்கிய பாதாம்எடை:1.8 அவுன்ஸ்அளவு:1/3 கப்
- ஆரஞ்சு பீல் (Candied orange peel)எடை:1.8 அவுன்ஸ்அளவு:1/3 கப்
செய்முறை
கேக் பேட்டர் தயார் செய்தல்
70 g வெண்ணெயுடன் 70 g பொடித்த சர்க்கரையை சேர்த்து அது க்ரீமியாகவும் மிருதுவாகவும் மாறும் வரை நன்கு பீட் செய்யவும். பின் ஒரு முழு முட்டை மற்றும் ஒரு முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து மீண்டும் நன்றாக அடிக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் 80 g மைதா, 20 g பாதாம் மாவு, ¼ tsp பேக்கிங் பவுடர், ¼ tsp உப்பு, ½ tsp பட்டைத்தூள் மற்றும் ¼ tsp சுக்குத்தூள் சேர்த்து கலக்கவும். இந்த உலர் கலவையை வெண்ணெய் கலவையில் சேர்த்து மிருதுவாக கலக்கிக் கொள்ளவும்.
பிறகு 50 g நறுக்கிய பாதாம், 50 g ஆரஞ்சு பீல் மற்றும் ஊறவைத்த உலர் பழங்களை சேர்த்து ஒன்றாகக் கலக்கவும்.
பேக்கிங் செய்தல்
வெண்ணெய் தடவிய கிறிஸ்மஸ் ட்ரீ மோல்டில் மாவை ஊற்றி, மேல் பகுதியை சமன் செய்யவும். 160°C (325°F) இல் முன்கூட்டியே சூடாக்கப்பட்ட ஓவனில் 25–30 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். நடுவில் டூத்பிக் விட்டுப் பார்த்தால் அது ஒட்டாமல் வர வேண்டும். கேக் ஆறியதும் மோல்டில் இருந்து எடுக்கவும்.
அலங்கரிக்க
- வைட் சாக்லேட்எடை:10.6 அவுன்ஸ்அளவு:1 3/4 கப்கள்
- வண்ண ஐசிங் மற்றும் ஸ்பிரிங்க்ளஸ்எடை:0.0 அவுன்ஸ்அளவு:தேவையான அளவு
செய்முறை
அலங்கரித்தல்
வைட் சாக்லேட்டை உருக்கி, ஆறிய கேக்குகளின் மீது ஊற்றி முழுவதுமாக கவர் செய்யவும். பின்னர் உங்களுக்கு பிடித்த வண்ண ஐசிங் மற்றும் ஸ்பிரிங்க்ளஸ் கொண்டு அலங்கரிக்கவும்.
அவ்வளவுதான், இந்த பண்டிகை காலத்தை சிறப்பிக்க நாவூறும் சுவையான கிறிஸ்மஸ் ட்ரீ ஃப்ரூட் கேக் தயார்! 🌟
அலர்ஜென்கள்
- க்ளுட்டன்
- முட்டை
- சோயா
- பால்
- நட்ஸ்
- சல்பைட்டுகள் (ஒயின், உலர் பழங்கள்)
பொருட்களின் கலவையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. பேக்கேஜிங்கைச் சரிபார்க்கவும்: தயாரிப்பாளர்கள் அலர்ஜென்களைச் சேர்த்திருக்கலாம், மேலும் பொருட்களில் அவற்றின் தடயங்கள் இருக்கலாம்.
மொத்த அளவீடுகள்
இணையதளத்திற்குச் செல்
வீடியோவைப் பார்